Tuesday 9 July 2019

வாக்குறுதிகளை நிறைவேற்ற செயற்குழு அமைக்கப்படும்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-

கடந்த பொதுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக செயற்குழு ஒன்றை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அமைக்கவுள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

ஆட்சி அமைத்து ஓராண்டை கடந்த நிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டடும்.

வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதியில் வழங்கப்பட்ட வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை இந்த செயற்குழு ஆய்வு செய்யும் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment