ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மஇகா போராடி பெற்ற 2,000 ஏக்கர் நிலத்திற்காக போராடுவதை விடுத்து இன்றைய அரசாங்கத்தின் மூலம் 2,000 ஏக்கர் நிலத்தை இந்திய சமுதாயத்திற்கு பெற்று கொடுங்கள் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.
பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் போராடி பெற்று தந்தநு மஇகா.
ஆனால் இன்று ஆட்சியமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அந்த 2,000 ஏக்கர் நிலத்திற்காக போராட்டம் நடத்துவோம் என கொக்கரிக்கின்றனர்.
உண்மையிலேயே இந்திய சமுதாயத்திற்கு நன்மை செய்ய நினைத்தால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கூடுதலாக 2,000 ஏக்கர் நிலத்தை பெற்று கொடுங்கள்.
'பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு' என்பதுபோல மஇகா போராடி பெற்றதற்கெல்லாம் போராட்டம் நடத்தி நல்ல பெயரை எடுக்க வேண்டாம் என்று மஇகா மகளிர் பிரிவு மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment