வாட்ஸ் அப் புலனத்தில் வெளியான
ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது தாம் தான் எனவும் தன்னுடம் இருந்த மத்திய அமைச்சர்
பிகேஆர் கட்சியின் தலைவர் எனவும் துணை அமைச்சர் ஒருவரின் உதவியாளர் முகநூல் பதிவு ஒன்றில்
ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்ட
இவ்விவகாரம் தொடர்பில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வாக்குமூலம் அளித்த முகம்மட் ஹஷீக் அஸீஸ் , சபாவில் நடந்த இடைத் தேர்தலின்போது
மே 11ஆம் தேதி ஃபோர் போய்ன்ட் தங்கும் விடுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தன்னுடைய
அனுமதி இன்றி இக்காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மலேசிய ஊழல்
தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட
அந்த அமைச்சர் ஒரு தகுதியான தலைவராவதற்கு தகுதியற்றவர் என ஹஷீக் அஸீஸ் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் மீது குற்றஞ்சாட்டியுள்ள
முகமட் ஹஷீக் அஸீஸ் மூலப் பொருள் தொழில்துறை துணை அமைச்சர் ஷம்சூல் இஸ்கண்டார் முகம்மட்
அக்கினியின்
உதவியாளர் ஆவார்.
30 வினாடிகள் ஓடக்கூடிய ஒப்புதல்
வாக்குமூல காணொளியில் ஹஷீக் அஸீஸ், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் பெயரையும் வெளியிட்டு
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment