புத்ராஜெயா-
சர்ச்சைக்குரிய
சமய போதகர் ஸாகீர் நாய்க்கை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்ததை வெளியுறவு
அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா உறுதிபடுத்தினார்.
ஆனாலும் ஸாகீர்
நாய்க்கை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
இந்திய அரசாங்கத்திடமிருந்து
கோரிக்கையை பெற்றோம். ஆனால் எப்போது என்பது நினைவில் இல்லை.
இவ்விவகாரத்தில்
புதிய முடிவு எதுவும் இல்லை. பழைய முடிவிலேயே உறுதியாக இருக்கிறோம் என்று சைஃபுடின்
அதுல்லா தெரிவித்தார்.
No comments:
Post a Comment