பினாங்கு,
தஞ்சோங் பூங்கா பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட
நிலச்சரிவில் நான்கு மியன்மார் பிரஜைகள் கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு
ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் கட்டுமானத் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு மியன்மார்
பிரஜைகளும் மண்ணில் புதையுண்டனர்.
நிலச்சரிவை
அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை
மீட்கும் பணியில் தீவிரம் காட்டினர்.
இரவு
11.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 12.00 மணியளவில் முதல் நபரின்
உடலை மீட்டெடுத்தனர்.
அதனை தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் வழி மண்ணில் புதையுண்ட மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment