நாட்டின் மேம்பாட்டிற்கு
உறுதுணை அளிக்கும் வகையில் மாஸ் நிறுவனத்திற்கு
நிர்வாக மாற்றம் அவசியம் என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இந்த விமான நிறுவனத்தில்
நிகழ்ந்துள்ள பல தவறுகளை சரி செய்ய இந்த நிர்வாக
மாற்றம் அவசியமாகிறது என்றார் அவர்.
இந்நிறுவனத்தில் ஒவ்வொரு
முறை மாற்றம் செய்யும்போதெல்லாம் நாம் தோல்வியே சந்திக்கிறோம். இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை
மேற்கொள்ளும்போது மிக கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று 33ஆவது ஆசிய பசிபிக் வட்டமேசை
கலந்தரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
No comments:
Post a Comment