துணைப் பிரதமர் பதவியிலும்
அமைச்சரவையிலும் தற்போது மாற்றமில்லை என்பதை பிரதமர் துன் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளதாக
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அன்வார் இப்ராஹிம் துணைப்
பிரதமராக பதவியேற்பதற்கு ஏதுவாக டத்தோஶ்ரீ வான் அஸிஸா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
என்று பிபிபிஎம் கட்சியின் ஜெராம்
சட்டமன்ற உறுப்பினர் முகமர் சைட் ரோஸ்லி கோரிக்கை
விடுத்திருந்தார்.
சில நாட்களாக சர்ச்சையாக
வெடித்திருந்த இவ்விவகாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் துணைப் பிரதமர் பதவிக்கு தற்போது
மாற்றம் இல்லை என அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment