மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவராக லத்தீபா கோயா நியமனம் செய்யப்பட்டிருப்பதை அனைத்துத் தரப்பினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
லத்தீபா கோயாவின் நியமனம்
தனது தனிப்பட்ட முடிவு என பிரதமர் துன் மகாதீர் கூறியிருந்த கருத்தை அடுத்து பக்காத்தான்
ஹராப்பான் கூட்டணி கட்சிகளும் அரசு சாரா பொது இயக்கங்களும் கடுமையான விமர்சித்து வருவது
அரசாங்கத்திற்கு பலவீனமாக மாறி விடும்.
எம்ஏசிசி தலைவராக லத்தீபா
கோயா நியமனம் செய்யப்பட்டதற்கான நியாயமான காரணத்தை அமைச்சரவைக்கும் பக்காத்தான் தலைமைத்துவ
மன்றத்திற்கும் துன் மகாதீர் விளக்கமளிப்பார் என நம்புவதாக டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
No comments:
Post a Comment