ஓராண்டை கடந்து விட்ட நம்பிக்கைக் கூட்டணிக்கு (பக்காத்தான்
ஹராப்பான்) முதலில் நமது வாழ்த்துகள். உலக வரலாற்றில் நீண்ட காலமாக ஒரு கூட்டணியே
ஆட்சி செய்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தை நம்மாலும் நிகழ்த்த முடியும் என்று
60 ஆண்டுகால தேசிய முன்னணிக்கு விடை கொடுத்து நம்பிக்கைக் கூட்டணியை ஆட்சி பீடத்தில்
அமரச் செய்த வாக்காளன் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக்
கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
வாக்காளனை
மீறி நாம் ஒருபோதும் ஆட்சி பீடத்தின் அதிகாரத்தை கைப்பற்றியிருக்க முடியாது என்ற நன்றியுணர்வு
நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இந்த தவணை முழுவதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்
என்பதே நமது எதிர்பார்ப்பு
ஆட்சி மாற்றம் எப்படி சாத்தியமானது?
2018
மே9இல் நிகழ்ந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி கட்டிலில் இருந்து தேசிய முன்னணி இறக்கப்பட்டு
நம்பிக்கைக் கூட்டணி ஏற்றப்படுவதற்கு முழு முதல் காரணம் பிரதமர் துன் மகாதீர்
எனும் ‘அரசியல் ராஜ தந்திரி’ ஒருவரே அன்றி
வேறெதுவும் இருந்து விட முடியாது.
தேசிய
முன்னணியின் ஆட்சியில் 4ஆவது பிரதமராகவும் 22 ஆண்டுகள் மலேசியாவை
வழிநடத்தியவராகவும் திகழ்ந்த துன் மகாதீர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு
தலைமையேற்றதே இந்த வெற்றிக்கு அடித்தளம் ஆனது.
பக்காத்தான்
ஹராப்பான் கூட்டணியின் கீழ் பொதுவான சின்னத்தில் அதில் இடம்பெற்றுள்ள பெர்சத்து,
பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகள் எத்தனித்தபோது பொது சின்னம் மறுக்கப்பட, பிகேஆர்
கட்சியின் சின்னத்தின் கீழ் இக்கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிட முடிவெடுத்ததே
மகாதீரின் சாணக்கியதனத்தை வெளிபடுத்தும்.
தன்னை
வீழ்த்துவதற்கென்று உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு
வென்று மீண்டும் பிரதமர் பதவியில் அமர்ந்திருப்பதே ஒரு சாதனைதான். அதுவும் 93ஆவது வயதில் மலேசியாவின்
7ஆவது பிரதமராக பதவியேற்றிருப்பதே உலக சாதனையாகும்.
தனது
93ஆவது வயதிலும் கூட நாட்டின் கரை புரண்டோயுள்ள ஊழலை வேர்றுக்க களம் கண்ட துன் மகாதீரை
பாராட்டியே ஆக வேண்டும்; அதற்காக அவருக்கு துணை நின்ற பக்காத்தான் ஹராப்பான்
கூட்டணியின் தலைவர்களுக்கும் மாண்புமிகுகளுக்கும்
வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.
சாதித்ததா? இல்லையா?
இந்த
ஓராண்டு காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சாதிக்கவில்லையா? என்ற வாதத்தை
முன்வைத்தால் சாதனைகள் நிச்சயம் அதற்குள் அடங்கும்.
நாட்டின்
கடனை அடைப்பதற்காக நிதி திரட்டியது, ஊழல் புரிந்தவர்கள் மீது வழக்கு, பெரு
திட்டங்களின் செலவீனங்களை குறைத்தது போன்ற திட்டங்களை முன்னெடுத்த பக்காத்தான்
ஹராப்பான் கூட்டணியின் சாதனை என்றே கூறலாம்.
ஆனால்,
இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டும் மலேசியர்களை திருப்திப்படுத்தி விடாது என்பதை
தலைவர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பர்.
தேர்தல்
காலத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு அது
நிறைவேற்றப்படாமல் போகும்போதே அதிருப்தி மேலோங்கியது. அதுதான் இன்றைய ஆளும் அரசாங்கத்திற்கு
ஆதரவு சரிவு கண்டிருப்பதும் ஆகும்.
யார் குற்றம்?
மலேசியர்களில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே வசதி வாய்ப்போடு வாழும்போது வசதி குறைந்த ஏனைய மக்கள் அரசாங்கத்தின் தயவையே நம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த
நம்பிக்கையின் விடியலாக அமைந்ததே தேர்தல் வாக்குறுதியாகும்.
ஓராண்டை
கடந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யும் அரசாங்கத்தின்
மீது அதிருப்தியும் அதனால் எழும் கோபத்திற்கும் மக்களை குறை சொல்ல முடியுமா?
அல்லது நாட்டின் நிதி வளத்தை காரணம் காட்டி வாக்குறுதிகளை செய்ய முடியாமல் தவிக்கும்
அரசாங்கத்தை பழிக்க முடியுமா?
நாளை தொடரும்….
இதன் முந்தைய பாகங்களை படிக்க கீழே உள்ள லிங்க்-ஐ அழுத்தவும்
ஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித்ததா? சோதித்ததா?- பகுதி -2
https://www.mybhaaratham.com/2019/05/2.html
இதன் முந்தைய பாகங்களை படிக்க கீழே உள்ள லிங்க்-ஐ அழுத்தவும்
ஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித்ததா? சோதித்ததா? -பகுதி 1
https://www.mybhaaratham.com/2019/05/1.html
No comments:
Post a Comment