டோக்கியோ-
நாடு எதிர்கொண்டுள்ள தேசிய
கடனை குறைப்பதற்கு அரசாங்கத்திற்கு 3 ஆண்டு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று பிரதமர்
துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 54 விழுக்காடு உச்சவரம்புக்கு தேசிய கடனை குறைக்க இந்த அவகாசம் தேவைபடுகிறது.
முந்தைய அரசாங்கம் முன்னெடுத்த
தவறான நடவடிக்கையினால் கடுமையான விளைவை எதிர்கொண்டுள்ளோம். அரசின் உச்சவரம்புக்கு மீறி
அதிகமான கடனை அவர்கள் வாங்கியுள்ளனர்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில்
நாட்டின் கடன் 1 டிரில்லியன் தொகையை தற்போது குறைத்துள்ளோம்.
மூன்று ஆண்டு கால அவகாசம்
நாட்டை நிர்வகிப்பதில் நாம் பெறும் அனைத்து வருமானத்தையும் செலவிடாது என டோக்கியோவில்
நடைபெற்ற ஜப்பானிய வெளியுறவுகூட்டுக் கிளப்
கூட்டத்தில் உரையாற்றியபோது துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment