சிரம்பான் -
அம்னோவின் இடைக்கால தலைவராக இருக்கும் முகமட் ஹசான் வருங்கால பிரதமாரவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முகமட் ஹசான் அம்னோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் போது அவர் பிரதமராக பதவியேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அரசியல் எப்போதுமே மாற்றங்கள் நிறைந்தது. இன்றைய அரசாங்கம் நாளை மாறக்கூடும். தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு பிரகாசமான சூழல் உள்ளது.
ஆதலால் 13ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் முகமட் ஹசானை வெற்றி பெறுவதற்கு வாக்காளர்கள் பெரும் ஆதரவு தர வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment