அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ள தாய்லாந்து, மாய் காவோ தீவின் அருகிலுள்ள புக்கெட் விமான நிலையத்தின் அருகில் யாரேனும் 'செல்பி' எடுத்தால் மரண தண்டனையை எதிர்கொள்ளக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற இத்தீவின் அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு அருகில் 'செல்பி' எடுக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கை விமான நிலையத்தின் பணிகளுக்கு இடையூறாக அமைந்துள்ள நிலையில் இங்கு 'செல்பி' எடுக்கும் தரப்பினருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று விமான நிலையத்தின் துணை மேலாளர் விச்சிட் கவ்சைத்தியாம் தெரிவித்தார்.
இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இங்கு புகைப்படம், செல்பி எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பயணிகள் செல்பி எடுக்கும்போது அது விமானியின் கவனத்தை சிதறடிக்கச் செய்யலாம்.
இந்த இடத்தை தவிர்த்து சுற்றுலா பயணிகளும் மக்களும் பிற இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
1978 வான் போக்குவர்த்து சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கும் நபருக்கு 5 முதல் 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மரணத் தண்டனையும் விதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment