ஜோகூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக யாரை நியமிப்பது என்பதை அரசாங்கம் தீர்மானிக்குமே தவிர அரண்மனை அல்ல என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இது அரசியல் சார்ந்த விவகாரம் ஆகும். இதில் சுல்தானின் பங்களிப்பு துளியும் கிடையாது. அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சி தலைமைத்துவம் தீர்மானிக்கும் என்று அவர் சொன்னார்.
ஜோகூர் மந்திரி பெசாராக பதவி வகித்த ஒஸ்மான் சோபியான் அப்பதவியிலிருந்து விலகுவதாக துன் மகாதீர் நேற்று அறிவித்தார்.
No comments:
Post a Comment