வானொலியில் நன்கு அறிமுகமான ஆனந்தா மற்றும் ராம் மீண்டும் இணைந்து வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடக்கம் ராகாவில் ‘அப்படி இப்படி எப்படி’ எனும்
புத்தம் புதிய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்கள். ஒவ்வொரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மணி 6 தொடக்கம் 10 மணி வரை ஒலியேறவுள்ள இந்நிகழ்ச்சியில், ரசிகர்கள் தங்களுடைய வார இறுதி நாட்களைச் சிறப்பாக களிக்க பல அரிய
விஷயங்கள் கலந்துரையாடவுள்ளார்கள்.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனந்தா, ராம்
மீண்டும் இணைந்து ராகாவில் நிகழ்ச்சி படைக்கவுள்ளார்கள். ‘அப்படி இப்படி எப்படி’
நிகழ்ச்சியில் வார நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்,
அண்மையச் செய்திகள், சமூக வளத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்ட சம்பவங்கள் என
பல அறிய தகவல்களைத் தொகுத்து வழங்குவார்கள்.
இதைத் தவிர்த்து, மலாய், ஆங்கிலத்தில் மொழி மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்த் திரைப்பட பாடல்களை ரசிகர்கள்
பாடுவதை இந்நிகழ்ச்சியில் கேட்கலாம். இந்நிகழ்ச்சியின் வாயிலாகவும் ரசிகர்கள்
தங்களுடைய அன்புக்குரியவர்களுக்காக பிறந்தநாள், திருமணம் போன்ற
வாழ்த்துகள் தெரிவிக்க விரும்பினால், ராகாவின் Whatsapp எண்களுக்கு அனுப்பி
வைக்கலாம். பிறகு, ஆனந்தா மற்றும் ராம் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களுடைய
வாழ்த்துகளைத் தெரிவிப்பத்தோடு மட்டுமின்றி அதனை வானொலியில் ஒலிபரப்புவார்கள்.
இந்நிகழ்ச்சியைக் குறித்த மேல் விவரங்களுக்கு, ராகாவின் raaga.fm அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது
முகநூல் மற்றும் ராகாவுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
No comments:
Post a Comment