ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
இந்தியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக ஆளும் அன்றைய ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக 2007ஆம் தலைநகரில் நடத்திய 'ஹிண்ட்ராஃப்' போராட்டத்தை ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மறந்து விட்டாரா? எனும் கேள்வி எழுகிறது.
அன்றைய தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என கூறி 25 நவம்பர் 2007இல் ஒரு லட்சம் இந்தியர்கள் ஹிண்ட்ராஃப்' போராட்டத்தில் பங்கெடுத்து தங்களின் அதிருப்தியை வெளிபடுத்தினர்.
இந்தியர்களின் இந்த அதிருப்தி அலையின் காரணமாக ஹிண்ட்ராஃப் சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியதோடு அந்த அமைப்பிற்கு தாம் தான் தலைவர் என கூறி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமையிலான அரசாங்கத்தில் துணை அமைச்சர் பதவியையும் தற்போதைய துன் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் வகித்து வருகிறார் வேதமூர்த்தி.
இந்தியர்களின் உரிமைக்காக மட்டுமே போராடி அமைச்சர் பதவியை தற்போது வகித்து வரும் வேதமூர்த்தி, மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் 'ஹுண்ட்ராஃப்' போராட்ட உணர்வை தற்போது காட்ட மறுப்பது ஏன்?
மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்களை டத்தோஸ்ரீ நஜிப் முன்பு வழங்கியிருந்தார்.
ஆனால் இன்றைய பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் 2,200 இடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதும் இந்தியர்கள் மத்தியில்ப, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2,200 அல்லது அதற்கு கூடுதலான மெட்ரிக்குலேஷன் வாய்ப்புகளை வேதமூர்த்தி பெற்று கொடுப்பாரா? அல்லது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியிலும் இந்தியரின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறது என கூறி அமைச்சர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்வாரா? என்ற கேள்விக்கான விடையை இந்திய சமுதாயம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment