கோலாலம்பூர்-
திறமையான
படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில்
ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
9ஆவது முறையாக
நடைபெறவுள்ள இவ்வாண்டு ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டியில் 18 வயதுக்கு
மேம்பட்ட மலேசியர்கள் கலந்துகொள்ளலாம். 13-15 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தைத்
தயாரிக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள்
ஆஸ்ட்ரோ உலகம் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடி, அங்குள்ள குறும்படப்
போட்டியின் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆஸ்ட்ரோ உலகம்
அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.
இந்தப்
போட்டியின் முதல் நிலை வெற்றியாளருக்கு ரிம 10,001 ரொக்கப்
பரிசு வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் முறையே வெ.7,501
மற்றும் வெ.5,001 ரொக்கப் பரிசு தட்டிச் செல்லலாம். ஆறுதல்
பரிசாக 6 பேருக்கு தலா ரிம 2,501 ரொக்கம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி,
வெற்றி பெறும் அனைத்து குறும்படங்களும் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும்
ஆஸ்ட்ரோ கோ செயலியில் ஒளிபரப்பப்படும்.
எதிர்வரும்
மே 14ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் தங்களுடைய படைப்புகள் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டியை குறித்து மேல் விவரங்களை அறிய www.astroulagam.com.my/shortfilm என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
No comments:
Post a Comment