கோலாலம்பூர்-
எஸ்பிஎம் தேர்வு முடிவுக்குப் பின்னர் மெட்ரிக்குலேஷன் முடிவுக்காக காத்திருந்த பெரும்பாலான இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்றும்
மெட்ரிக்குலேஷன் பயிலும் வாய்ப்பு கிடைக்காமல் அலைகழிக்கப்படும் இந்திய
மாணவர்களின் வேதனை பக்காத்தான் ஆட்சியிலும் தொடரத்தான் வேண்டுமா? என்ற ஆதங்கம்
இந்திய சமுதாயத்தின் மத்தியில் எழுந்துள்ளது.
எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற
மாணவி ஒருவரின் மெட்ரிக்குலேஷன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சமூக வலைதளங்களில்
வைரலாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் பலரின் பரிதாப நிலை வெளிச்சத்திற்கு
கொண்டு வரப்படவில்லை.
முந்தைய தேசிய முன்னணி
ஆட்சியின்போது ம இகாவின் முயற்சியில் 1,500 மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன்
பயில்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மஇகா முன்னெடுத்த இந்த முயற்சியையே
விமர்சனம் செய்த இன்றைய மாண்புமிகுகள் (அன்றைய எதிர்க்கட்சியினர்) தங்களது
ஆட்சியில் இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரலெழுப்ப
தயக்கம் காட்டுவது ஏன்?
தேமுவையும் மஇகாவையும்
விமர்சித்தே அரசியல் செய்த மாண்புமிகள் பலர் ஆளும் அரசாங்கமும் ஆட்சியும்
நம்மிடையே உள்ளது என்பதை உணர்ந்து இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு
தீர்வு காண முற்படுவதே சாலச் சிறந்ததாகும்.
No comments:
Post a Comment