Friday, 12 April 2019

3 மாதங்களுக்கு மக்களவையில் நுழைய நஜிப்புக்கு தடை

கோலாலம்பூர்-
ஃபெல்டா தொடர்பான வெள்ளை அறிக்கையை பொதுவில் வெளியிட்டதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மக்களவையில் நுழைய 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளை அறிக்கையை காலை 11.30 மனியளவில் டத்தோஶ்ரீ நஜிப் பொதுவில் வெளியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேன்டும் என்று
பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து இன்று காலை மக்களவை கூடிய வேளையில் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு 3 மாத கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


No comments:

Post a Comment