தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக 2,200 இடங்களை ஒதுக்கிய நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அவ்வெண்ணிக்கை என்னவானது? என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேள்வி எழுப்பினார்.
2019ஆம் ஆண்டுக்கான மெட்ரிக்குலேஷன் மாணவர் தேர்வில் தகுதியுடைய இந்திய மாணவர்கள் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்று மஇகாவின் முயற்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமையில் இந்திய மாணவர்களுக்காக 2,200 இடங்களை ஒதுக்கப்பட்டது.
ஆனால் இன்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அந்த எண்ணிக்கை பூர்த்தி செய்யப்பட்டதா? எத்தனை இந்திய மாணவர்களுக்குதான் மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது?
மஇகா அன்று அவ்வளவு செய்தும் குறை கூறி கொண்டிருந்த இன்றைய மாண்புமிகுகள் ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதிக்கின்ற போதிலும் இவ்விவகாரம் தலை தூக்குவது ஏன்?
மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் 2,200 எண்ணிக்கையை முடிந்தால் அதிகரியுங்கள். இல்லையேல் அந்த எண்ணிக்கையை நிலைநிறுத்தி இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். இந்திய சமுதாயம் என்றுமே உங்களை மறவாது என்று மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் வெளியிட்டுள்ள குரல் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
அதோடு, மெட்ரிக்குலேஷன் விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கிற்கு டத்தோஸ்ரீ சரவணன் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment