கோலாலம்பூர்
அனைத்துலக விமான நிலையத்தின் அருகெ நிகழ்ந்த பேருந்து விபத்தில் இரு பெண்மணிகள் உட்பட
10 பேர் பலியான வேளையில் 34 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்றிரவு
11.10 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் அந்நியத் தொழிலாளர்களை ஏற்றி இருந்த பேருந்து
கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ
இடத்திலேயே 8 அந்நியத் தொழிலாளர்களும் உள்ளூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனரும் சம்பவ
இடத்திலேயே பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த பெண்மணி ஒருவர் செர்டாங் மருத்துவமனையில்
சிகிச்சை பெறும்போது மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
கட்டுப்பாட்டை
இழந்ததால் 10 மீட்டர் ஆழம் உள்ள கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும்
இப்பேருந்தில் பயணித்த 43 அந்நிய நாட்டவர்கள் நள்ளிரவு 12.00 மணிக்கு பணிக்கு நுழையவிருந்ததாகவும்
மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சூல்கிப்ளி அடாம்ஸா தெரிவித்தார்.
No comments:
Post a Comment