கோ.பத்மஜோதி/ ரா.தங்கமணி
கோலாம்பூர்,
இராஜயோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கத்தில் (ஆர்பிடி) யோக சக்தியை பெற்று தன் கல்விக்கான பயிற்சிகளை பயன்படுத்தி அதில் மாபெரும் மாற்றத்தை பெற்றதாக ஆர்பிடியின் மாணவமணிகள் தெரிவித்தனர்.
ஆர்பிடியின் மாணவச் செல்வங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் ஆர்பிடி இயக்கம் மிகச் சிறப்பாக நடத்தி வரும் கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு கல்வி கேள்விகளில் மட்டுமின்றி விளையாட்டுத் துறைகளிலும் ஆர்பிடியின் மாணவர்கள் வெற்றிநடைபோடுகின்றனர் என்பதே திண்ணம். கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு முக்கிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பதே இதற்கு சான்றாகும்.
சீடர்களால் அன்போடு அழைக்கப்படும் ஆர்பிடியின் ஸ்தாபகர் டத்தோஶ்ரீ குருஜி வழங்கிய யோக சக்தி பயிற்சி தன் கல்விக்கு உந்துதலாக அமைந்ததாகவும் வாழ்வில் முன்னேற்றம் காண பெரும் பங்காற்றியதாகவும் கடந்தாண்டு தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சியை பெற்ற ஆர்பிடி மாணவர்கள் தங்களின் அனுபவத்தை "பாரதம் மின்னல் ஏடு-டன்" பகிர்ந்து கொண்டனர்.
" எனக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிகொணர வைத்தது யோக சக்தி"- தனேஷ் மதிவாணன்
"டத்தோஶ்ரீ குருஜியிடம் யோக சக்தி பயிற்சி பெற்ற பின்னரே மறைந்திருந்த என்னுடைய திறமைகள் வெளிவந்தன. 'ஆசியான் ஸ்கூல் கேம்ஸ்' ஹோலிபோல் விளையாட்டில் முதல்நிலை தங்கப்பதக்கம் வென்றேன். இன்னமும் இந்த குழுவில் இருக்கிறேன்.
தொடர்ச்சியாக இரண்டு வேளை தியானம், குருவிடம் பிரார்த்தனை, இறைவனிடம் பிரார்த்தனையே இந்த வெற்றி கனியை தொட வைத்தது.
தொடர்ச்சியான பயிற்சியே சிறந்த தேர்ச்சிக்குக் காரணம் - பவித்திரன் லோகநாதன்
யோக சக்தி பயிற்சியை முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்தியதால் அண்மையில் வெளிவந்த எஸ்பிஎம் தேர்வில் 9ஏ பெற்றேன். கல்வி அணுகுமுறை பயிற்சியை ஒவ்வொரு நாளும் மேற்கொண்டு வந்ததே இதற்கு காரணமாகும்.
2016 கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அதில் கற்றுக் கொடுத்த யுக்திகளை பயன்படுத்தியதால் இத்தேர்வு முடிவில் சிறந்த மதிப்பெண்களை பெற்றேன்.
கல்வியில் மாற்றம், வாழ்க்கையில் இன்பம்-ஷர்வினி சந்திரன்
கணிதம் பாடத்தில் குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்தேன். யோக சக்தியை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தி வந்ததால், எஸ்பிஎம் தேர்வில் கணிதப் பாடத்தில் ஏ பெற்று சாதனை படைத்துள்ளேன். யோக சக்தி பயிற்சியை பெற்ற பிறகு கல்வியில் மாற்றத்தையும் வாழ்க்கையில் இன்பத்தையும் உணர்ந்தேன்.
கடினமாக இருந்ததெல்லாம் சுலபமாக மாறியது- சிநேஹா பத்மநாதன்
2013ஆம் ஆண்டு யோக சக்தி பயிற்சியை பெற்றேன்.. தொடர்ந்து இருவேளை தியானம் செய்து வந்தேன். அந்த தியானத்தின் மூலம் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை உணர்ந்தேன். கடந்த எஸ்பிஎம் தேர்வில் 11 ஏ பெற்று குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளேன்.
பிரத்தியேக வகுப்பு செல்லவில்லை. ஆனால்....-அபிலாஷினி குணசீலன்
பிரத்தியேக வகுப்புக்குச் செல்லாமலேயே யோக சக்தியை பயன்படுத்தி எஸ்பிஎம் தேர்வில் 8ஏ பெற்றேன். டத்தோஶ்ரீ குருஜி வழங்கிய பயிற்சியை முழுமையாக பயன்படுத்தியதால் அதன் முழு பலனை அடைந்தேன்.
யோக சக்தியினால் ஞாபக சக்தி ஆற்றல் அதிகரித்தது-மகேஸ்வரி சிவானந்தன்
பள்ளியில் ஆசிரியர் கற்று கொடுப்பதை கூர்ந்து கவனிப்பேன். அதை மட்டுமே வைத்து சிறந்த முறையில் பயின்று தேர்வை எழுதினேன். ஞாபக சக்தி ஆற்றலால் எஸ்பிஎம் தேர்வில் 9ஏ பெற்றேன். பாடத்திட்டத்தில் மட்டுமல்லாது புறப்பாட நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வதற்கு யோகசக்தியே காரணமாக அமைந்தது.
மூன்றே மாதங்களில் கல்வியில் முன்னேற்றம்-ஷாலினி சுப்ரமணியம்
கூடுதல் கணிதம் பாடத்தில் மிகவும் பலவீனமாக இருந்தேன், ஆனால் யோக சக்தியை பயன்படுத்தியதன் விளைவாக மூன்றே மாதங்களில் அப்பாடத்தில் சிறந்த தேர்ச்சி நிலையை அடைந்தேன். பிரேத்தியேக வகுப்புக்கு செல்லாமலே எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்றேன்.
கல்வி அணுகுமுறையினால் சிறந்த தேர்ச்சி-ஈஸ்வர் சோமநாயுடு
ஆபிடி இயக்கம் வழங்கிய கல்வி அணுகுமுறையின் வழி எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்றேன். தொடர்ச்சியாக தியானம். பயிற்சி செய்ததன் விளைவாக இத்தேர்வில் சிறந்த நிலையை அடைந்தேன்.
No comments:
Post a Comment