கோலாலம்பூர்-
தேசிய முன்னணியின்
கூட்டணியில் இருந்து மஇகா வெளியேறும் பட்சத்தில் அவ்விடத்தை ஐபிஎப் கட்சி பூர்த்தி
செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தேமுவுக்கு
ஆதரவாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவாசம் காட்டி ஆதரவளித்து வந்துள்ள ஐபிஎப்
கட்சி, தேமுவின் பங்காளி கட்சியாக இடம்பெற பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளது.
ஆனால் அதற்கான
கதவு திற்க்கப்படாத நிலையில் தோழமைக் கட்சியாக மட்டுமே நீடித்து வந்த நிலையில் மஇகா
தேமு கூட்டணியிலிருந்து வெளியேறுவதன் மூலம் ஐபிஎப் கட்சி அக்கூட்டணியில் இடம்பெறும்
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேமு கூட்டணியை விட்டு பல கட்சிகள் விலகி விட்ட நிலையில் சுதந்திர காலத்தின்போதே ஒரே கூட்டணியாக செயல்பட்ட மஇகா, மசீச ஆகியவை அம்னோவை விட்டு தற்போது பிரிந்திருக்கின்றன.
No comments:
Post a Comment