அமைச்சர் வேதமூர்த்தியின் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியர்களிடையேயான ஒற்றுமை படுமோசமாக சீர்குலைந்து வருகிறது என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் சாடினார்.
பிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்படும் சமூக ஒற்றுமைத் துறைக்கு பி.வேதமூர்த்தி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆனால் இவரின் தலைமைத்துவத்தின் கீழ் அதிகளவு இனங்களுக்கு இடையிலான நல்லிணைக்கம் குறைந்து வருவதாகவும் இன விவகாரங்கள் அதிகளவு தலை தூக்குவதாகவும் கைரி சொன்னார்.
முன்பெல்லாம் இனம், சமயம் சார்ந்து அதிகம் யாரும் பேச மாட்டார்கள். ஆனால் இப்போது அது அதிகரித்து விட்டது.
தீயணைப்பு வீரர் ஒருவர் மரணமடைந்ததற்கு இந்த இன விவகாரமே காரணமாக அமைந்துள்ள நிலையில் மக்களிடையேயான நல்லிணக்கத்தை பாதுகாக்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தவறியதே இதற்கு காரணம் ஆகும்.
நாட்டின் ஒற்றுமை இப்போது மிகச் சிறப்பாக உள்ளதா? மலாய்க்காரர், சீனர், இந்தியர்களிடையேயான ஒற்றுமை வலுவாக உள்ளதா? அல்லது 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் படுமோசமாக வீழ்ச்சி கண்டுள்ளதா?
முன்பு அம்னோ இனவாதம் கொண்டது என கூறினார்கள். ஆனால் இப்போதைய சூழல் அப்போது இருந்ததா?
நாட்டு மக்களிடையேயான ஒற்றுமையை வேதமூர்த்தி சீர்குலைத்து விட்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் அது படுமோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது என்று கைரி ஜமாலுடின் குரிப்பிட்டார்.
No comments:
Post a Comment