Sunday 17 February 2019

செமினி: அம்னோவுக்கு ஆதரவாக பாஸ் களம் காணாது- பிரதமர்

-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்னோவுக்கு ஆதரவாக பாஸ் கட்சி களம் காணாது என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

நேற்று  வெள்ளிக்கிழமை தன்னை சந்தித்த பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹடி அவாங்கிடம் பல அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினேன். அப்போது செமினி இடைத் தேர்தலில் அம்னோவுக்கு ஆதரவாக களமிறங்கப் போவதில்லை என்று ஹடி அவாங் கூறினார்.

'பாஸ் கட்சி அம்னோவை ஆதரிக்கவில்லை. ஒரு புரிந்துணர்வு அடிப்படையிலேயே அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றியதாக ஹடி கூறினார் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment