Wednesday 20 February 2019

பெண்மணியிடம் கொள்ளை; குண்டர் கும்பலைச் சேர்ந்த கொள்ளையன் கைது

கோலாலம்பூர்-
தாமான் முத்தியாரா எம்ஆர்டி மின்தூக்கியில் பெண்மணியை தாக்கி கொள்ளையிட்ட ஆடவனை கைது செய்துள்ள போலீசார், அவ்வாடவன் 08 குண்டர் கும்பலைச் சேர்ந்தவன் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் எம்ஆர்டி நிலையத்திலுள்ள நிலையத்திலுள்ள மின்தூக்கியில் பெண்மணியை தாக்கி கொள்ளையிடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இதில் கொள்ளையிட்ட ஆடவனை வலை வீசி தேடிய போலீசார் தாமான் செராசிலுள்ள வீடொன்றில் கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட ஆடவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன் எனவும் அவ்வாடவன் மீது கொள்ளை, வீடு புகுந்து கொள்ளையிடுதல் என 8 புகார்கள் இருப்பதாக மாநகர போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லஸிம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment