அம்னோவின் தலைவர் பதவியை துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசினிடம் ஒப்படைத்தார் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி.
தமது தலைவர் பதவியை துணைத் தலைவர் மிகச் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு.
பல்வேறு நெருக்குதல்களுக்கு மத்தியில் தனது தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பதாகவும் இனி அம்னோவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொள்வதாகவும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டார்.
டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடியின் தலைமைத்துவத்தை விரும்பாததால் அம்னோவில் இருந்து விலகுவதாக ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்தே ஸாயிட் ஹமிடி இம்முடிவை எடுத்துள்ளார் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment