Tuesday 4 December 2018

பேரா மாநிலத்தில் 363 மாணவர்கள் 8ஏ

புனிதா சுகுமாறன்

ஈப்போ;
இவ்வாண்டு நடைபெற்ற யூபிஎஸ்ஆர் தேர்வில் பேராக் மாநிலத்தில் மொத்தம் 34ஆயிரத்து 713 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

இதில் 363 மாணவர்கள் 8ஏ எடுத்து முழு தேர்சசி பெற்றுள்ளனர் என்று பேரா மாநில கல்வி இலாகாவின் அதிகாரி டத்தோ ரோசி புத்தே தெரிவித்தார்

23ஆயிரத்து 549 மாணவர்கள் டி நிலை வரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து கிந்தா மாவட்டத்தில் கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் 4 மாணவர்கள் 8ஏ எடுத்துள்ளனர். இப்பள்ளியில் மொத்தம் 77 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

 அடுத்த நிலையில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியில் 3 மாணவர்கள் 8ஏ எடுத்துள்ளனர்

இதனை தொடர்ந்து சங்கீதசபா தமிழ்ப்பள்ளியில் 2 மாணவர்கள் 8ஏ எடுத்துள்ளனர்

மேலும் செயின்ட் பிளோமினா தமிழ்ப்பள்ளியில் 1 மாணவி 8ஏ பெற்றுள்ளார். எடுத்து தேர்ச்சினை பெற்றுள்ளார்

இவ்வாண்டு  தேர்வு அடைவு நிலை திருப்தியாக இருந்தாலும் 8ஏ பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

No comments:

Post a Comment