Wednesday 21 November 2018

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியமைத்தற்கு நீங்கள்தான் பதவி விலக வேண்டும்- சேவியரை சாடினார் மணிமாறன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தமிழ்ப்பள்ளிகள் விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்தை தவறாக புரிந்துக் கொண்டுள்ள மேலவைத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டுமானால் நடந்து முடிந்த  பொதுத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிக் கொடுத்து மக்களை ஏமாற்றியதற்கு நீங்கள் தான் பதவி விலக வேண்டும் என்று நீர், நில, இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமாருக்கு சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

தமிழ்ப்பள்ளிக்கு மானியம் ஒதுக்கீடு போதவில்லையென்றால் அரசுப் பள்ளிகளாக மாற்றம் செய்யுங்கள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் விடுத்துள்ள கோரிக்கையானது பின்னாளில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தாக முடியலாம்.

தமிழ்ப்பள்ளிகள் அரசு பள்ளிகளாக மாறும்போது அதன் நிலம் அரசுக்கு சொந்தமாக்கப்படும். இதனால் பின்னாளில் அந்நிலத்தில் அப்பள்ளி நிலைபெற்றிருக்குமா? என்பதே கேள்விக்குறியாகும்.

இந்நிலையில் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் குரல் எழுப்பிய மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனை பதவி விலகச் சொல்லும் சேவியர் ஜெயகுமார், பொதுத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சியமைத்தற்கு நீங்கள்தான் பதவி விலக வேண்டும் என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment