Monday 29 October 2018

பண்டார் பூச்சோங் ஜெயா மாரியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது

ரா.தங்கமணி

பூச்சோங்-
பண்டார் பூச்சோங் ஜெயாவில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கான நிலப்பட்டா ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள இவ்வாலயம்  நிலத்தை பெறுவதற்கு கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆயினும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஆலய நிர்வாகம் தோல்வி கண்ட நிலையில் மக்கள் கூட்டணி ஆட்சியின்போது சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

பின்னர் இந்நில விவகாரம் கிடப்பில் போடப்பின்னர் மீண்டில் 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வேளையில் மீண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

பிறகு மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக இவ்வாலயம் அமைந்துள்ள முக்கால் ஏக்கர் நிலம்  ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலம் அதிக விலைமதிப்பு மிக்கது என்பதோடு அது மேம்பாட்டு நிலமாகவும் வகைபடுத்தப்பட்டிருந்தது. ஆயினும் ஆலய நிர்வாகத்தினார் ஒன்றாக இணைந்து எவ்வித பிளவுகளும் சுயநலமுமின்றி செயல்பட்டதன் விளைவாகவே இந்நிலம் ஆலயத்திற்கு கையகப்படுத்தப்பட்டது.

இவ்வேளையில் ஒற்றுமையாக இருந்து ஆலய நிலத்தை பெற நடவடிக்கை மேற்கொண்ட ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றி கூறி கொள்வதாக குறிப்பிட்ட கணபதிராவ், இதேபோன்று சீபில்ட் மாரியம்மன் ஆலயமும் ஒன்றாக செயல்பட்டிருந்தால் இன்று எவ்வித சர்ச்சையும் ஏற்பட்டிருக்காது என மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment