கோலாலம்பூர்-
'MALAYSIA 1' என்ற வாகன எண் பட்டை 1 மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது.
இந்த 'MALAYSIA 1' என்ற வாகன எண் பட்டையை 1,111,111.00 வெள்ளிக்கு Aldi International Sdn.Bhd. நிறுவனம் வாங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அதேபோன்று MALAYSIA 8 என்ற எண்பட்டையை Project concept Sdn.Bhd. நிறுவனமும் (வெ.618,000.00), MALAYSIA 99 எண் பட்டையை 99 Speed Mart Sdn.Bhd நிறுவனமும் (வெ.501,500.00), MALAYSIA 2 எண் பட்டையை Aldi international Sdn.Bhd நிறுவனமும் (வெ.422,000) வாங்கியுள்ளன.
MALAYSIA 1-9999 ஆகி வாகன எண் பட்டை மூலம் 13,167,971.37 வெள்ளி வசூல் செய்யப்பட்டது எனவும் அந்நிதி அரசாங்க கருவூல மையத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment