Thursday, 5 July 2018
டத்தோஶ்ரீ நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன தெரியுமா?
கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் மூன்று மோசடி குற்றச்சாட்டுகளும் ஓர் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.
அக்குற்றச்சாட்டுகள் என்னென்னெ தெரியுமா?
குற்றச்சாட்டு 1:
பிரதமர், அமைச்சர், அரசாங்க பணியாளர், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன ஆலோசகர் ஆகியவற்றின் அடிப்படையில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுனவனத்தின் 400 கோடி வெள்ளி (வெ.4 பில்லியன்) மீதான அதிகார பொறுப்பு நஜிப்பிடம் வழங்கப்பட்டது. அவ்வகையில் 27 மில்லியன் பணத்தை கையாடல் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இக்குற்றத்தை 2014ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில் தலைநகர், ஜாலான் ராஜா சூலானில் உள்ள எம் வங்கியில் செய்திருப்பதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டமம் 409-ஆவது பிரிவின் கீழ் அதிகபட்சம் 20 ஆண்டுகால சிறைத் தண்டனையும் பிரம்படியும் அபராதமும் விதிக்கப்படலாம்.
குற்றச்சாட்டு 2:
அதே நாளில் அதே இடத்தில் டத்தோஶ்ரீ நஜிப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எஸ்ஆர்சி இண்டர்நேஷன்ல் நிறுவனத்தின் 500 கோடி வெள்ளி (வெ.5 பில்லியன்) கையாண்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு 3:
டத்தோஶ்ரீ நஜிப் அதே வங்கியில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 10 மில்லியன் வெள்ளியை அதே வங்கியில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதிக்கும் மார்ச் 2ஆம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில் கையாடல் செய்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு 4:
டத்தோஶ்ரீ நஜிப் பிரதமர், நிதி அமைச்சர், அரசாங்க பணியாளர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் 42 மில்லியன் வெள்ளியை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
2011, ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து 2012, பிப்ரவரி 8ஆம் தேதிக்கு இடைபட்ட காலத்தில் புத்ராஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நஜிப் மீதான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செக்ஷன் 24ஆவது பிரிவின் கூழ் குற்றம் சுமத்தப்பட்டது.
தண்டனை என்ன?
டத்தோஶ்ரீ நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டு கால சிறைத் தண்டனையும் கையூட்டு தொகையை விட 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment