Friday, 13 July 2018

தெளிவான காரணத்தை இந்தியா வழங்கினால் ஸாகீர் நாய்க்கை அனுப்பவது பரிசீலிக்கப்படும் - கோபிந்த் சிங்


கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கை திருப்பி அனுப்புவதற்கான தெளிவான காரணத்தை இந்திய அரசாங்கம் சட்டப்பூர்வமாக எடுத்துரைக்குமாயின் அதற்கு மலேசிய அரசாங்கம் மதிப்பளிக்கும் என தகவல் தொடர்பு, பல்லுடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

ஸாகீர் நாய்க் விவகாரம் நேற்றைய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது என கூறிய அவர், ஸாகீர் நாய்க் மீது வழக்கு இருப்பதாக கூறும் இந்திய அரசாங்கம் அதற்கான தெளிவான விளக்கத்தை வழங்கவில்லை.

தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டால் ஸாகீர் நாய்க்கை இந்தியாவுக்கு அனுப்பலாமா வேண்டாமா? என்பது குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என அவர் விவரித்தார்.

இதனிடையே, ஸாகீர் நாய்க்கிற்கு நிரந்தரகுடியுரிமை வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புகையில் அது குறித்து கருத்துரைக்க கோபிந்த் சிங் மறுத்து விட்டார்.

No comments:

Post a Comment