Sunday, 15 July 2018

ஸாகீர் நாய்க்கை திரும்ப அனுப்புமாறு கடந்தாண்டே கோரிக்கை விடுக்கப்பட்டது- உறுதிபடுத்தியது இந்திய அரசு

கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கை திரும்ப அனுப்புமாறு கடந்தாண்டு ஜனவரி மாதம் கேட்டுக் கொண்டதை இந்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஶ்ரீ ரவீஸ்குமார் இதனை குறிப்பிட்டுள்ள நிலையில், பல்வேறு குற்றங்களால் இந்தியாவில் தேடப்படும் ஸாகீர் நாய்க்கை திரும்ப அனுப்புமாறு வழக்கமாக கேட்டுக் கொண்டோம்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே 2010ஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் எங்களது கோரிக்கையை மலேசிய அரசாங்கம் இன்னமும் மறுபரிசீலனை செய்து கொண்டுருப்பதாக அவர் சொன்னார்.

ஸாகீர் நாய்க் விவகாரம் தொடர்பில் மலேசிய அதிகாரிகளுடன் இந்திய அரசாங்கம் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ரவீஸ் மேலும் கூறினார்.

மலேசியாவின் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ள ஸாகீர் நாய்க், இங்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படுத்தாத வரை இங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார் என பிரதம துன் மகாதீர் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment