Tuesday, 17 July 2018

முதன் முதலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரானார் டத்தோஶ்ரீ நஜிப்


கோலாலம்பூர்-
தனது அரசியல் வரலாற்றில் முதன் முதலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக காணப்பட்டார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்.

இன்று தொடங்கிய முதலாவது கூட்டத் தொடரின்போது  பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ நஜிப் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிசையில் அமர்ந்தார்.

காலை 9.45 மணிக்கு நாடாளுமன்றம் வந்த அவர், அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களை புன்னகைத்தவாறு உள்ளே சென்றார்.

இதுநாள் வரை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே திகழ்ந்த டத்தோஶ்ரீ நஜிப், இன்று முதன் முதலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக காணப்பட்டார்.

No comments:

Post a Comment