Saturday, 7 July 2018

சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இணைக் கட்டடம்; கல்வி அமைச்சருடன் பேசுவேன் - சிவகுமார்

தைப்பிங்-
கமுண்டிங்கில் உள்ள சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தேவைபடும் இணைக் கட்டட விவகாரத்தை  கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கூறினார்.

முழு அரசு உதவி பெறும் பள்ளியாக திகழும் இப்பள்ளியில் பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது அவசியமாகிறது. அறிவியல் கூடம்,  ஆசிரியர் அறை, நூலகம், சந்திப்பு அறை, தொழில்திறன் பயிற்சி கூடம் ஆகியவற்றை பூர்த்தி செய்வதற்கு இந்த இணைக் கட்டடம் அவசியம் என பள்ளி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

147 மாணவர்கள், 15 ஆசிரியர்களைக் கொண்டு செயல்படும் இப்பள்ளியின் இன்றைய சூழல் சிறப்பானதாக இருந்தாலும் ஆக்ககரமான திட்டங்களை மேற்கொள்ள புதிய இணைக் கட்டடம் அவசியம் என பள்ளி தலைமையாசிரியர் ஆன்ட்ரூ ஜேக்கப்,  பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம்,  பள்ளி வாரியக்குழு ஆகியோருடனான சந்திப்பின்போது கோரிக்கை விடுக்கப்பட்டதாக சிவகுமார் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சருடன் பேசவிருப்பதாகவும் இதற்கு சிறந்த தீர்வு காணப்படும் எனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment