Saturday, 7 July 2018

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதில் அதிருப்தியா? நீதிமன்றத்தை நாடலாம் - துன் மகாதீர்


புத்ராஜெயா- 
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குடும்பத்தினரன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதில் மன நிறைவு கொண்டிருக்காவிட்டால் அவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லலாம் என பிரதமர் துன் மகாதீர் முகம்மது கூறினார்.

இது ஒரு குற்றச்சாட்டு ஆகும். இதனை தவறு என கருதினால் நீதிமன்றத்திற்கு தாராளமாக செல்லலாம் என் புத்ராஜெயாவிலுள்ள யயாசான் பெர்டானாவில் அவர் இவ்வாறு சொன்னார்.

தனது தந்தைக்கு ஜாமீன் பணத்தை தயார் செய்தபிறகு தன்னுடைய வங்கி கணக்கும் தனது 10 மாத குழந்தையின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது என நஜிப்பின் மகள் நோர்யானா நஜ்வா குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் பழி வாங்கும் படலம் என குறிப்பிட்ட அவர், தனது குடும்பத்தை ஒழிப்பதில் அவர்கள் முயல்கின்றனர் என கூறினார்.

தன்னுடைய வங்கி கணக்கும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என நஜிப்  மகன் நோராஸ்மான் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment