Monday, 9 July 2018
சாலை விபத்து; ஒருவர் பலி; மூவர் படுகாயம்
கோலாலம்பூர்-
சாலை போக்குவத்துக்கு நேர் மாறாக வாகனத்தை செலுத்தியதால் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலை 3.20 மணியளவில் மெக்ஸ் நெடுஞ்சாலையின் 10ஆவது கிலோ மீட்டரில் சாலை போக்குவரத்துக்கு நேர் மாறாக மஸ்டா-3 கார் அதிவேகத்தில் செலுத்தப்பட்டதால் எதிரே வந்த ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பிரிவ் காரில் பயணம் செய்த 36 வயதுடைய தனியார் பாதுகாவலர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததோடு அவருடன் பயணித்த மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதில் மஸ்டா காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தார்.
காயமடைந்த அனைவரும் யுகேஎம் மருத்துவ மையத்திற்கு கொண்டி செல்லப்பட்டனர். இவ்விபத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் 41 (1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக தலைநகர் போக்குவரத்து குற்றப்புலனாய்வு துறை துணை ஆணையர் சூல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment