Tuesday 3 July 2018

காரணமின்றி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதா? உடனடி தீர்வு காண்க -மணிமாறன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் காரணம் ஏதுமின்றி வேலை நீக்கம் செய்யப்படவிருந்த  தொழிலாளர்கள் விவகாரத்திற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

இங்கு பணியாற்றும் 28 தொழிலாளர்கள் இன்று பணிநீக்கம் செய்யப்படுவதாக இருந்த நிலையில் அதில் அதிருப்தி கொண்ட தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை தொழிற்சாலைக்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட வேண்டும் என நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்பில் கருத்துரைத்த மணிமாறன், இந்த தொழிலாளர்கள் எவ்வித காரணமும் இன்றி வேலை நீக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.

இதற்கு முன் 2009இல் இதே போன்ற பிரச்சினை எழுந்தபோது அப்போது மனிதவள அமைச்சராக இருந்த  டத்தோஶ்ரீ ச.சுப்பிரமணியம் கவனத்திற்குக் கொண்டுச் சென்று தீர்வு கண்டேன்.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதை விட மற்றொரு நிறுவனத்தில் பணி புரியும் அந்நியத் தொழிலாளர்களுக்கு பதிலாக இவர்களை பணியில் அமர்த்தலாம்.

தற்போது மீண்டும் எழுந்துள்ள இப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இலாகாக்கள் உரிய தீர்வினை காண வேண்டும் என இன்றுக் காலை சம்பவ இடத்திற்கு வந்த மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment