Thursday, 26 July 2018

இவ்வாண்டு தீபாவளி 'மக்களின் தீபாவளி'யாகக் கொண்டாடப்படும்- சிவசுப்பிரமணியம்


ரா.தங்கமணி

ஈப்போ-
ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் ஆண்டுதோறும்  கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டம் இவ்வாண்டு 'மக்களின் தீபாவளி'யாக கொண்டாடப்படும் என பேரா மாநில இந்திய விவகாரப் பிரிவு பொறுப்பாளர் ஆதி.சிவசுப்பிரமணியம் கூறினார்.

கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டதை போல இவ்வாண்டும் வர்த்தக நடவடிக்கைகள், கலை நிகழ்ச்சியுடன் இவ்வாண்டு தீபாவளி சந்தை நடத்தப்படும்.

இந்த தீபாவளி சந்தையில் அமைக்கப்படும் கூடாரங்களில் வியாபாரம் மேற்கொள்ள கடை உரிமையாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் அதை ஏற்க மறுத்தால் மட்டுமே பிறருக்கு கடைகள் வழங்கப்படும்.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தை கைப்பற்ற ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி கூறும் வகையில் கடைகளின் வாடகை மிக குறைந்த விலையில் வழங்குவதற்கு ஈப்போ மாநகர் மன்றத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment