Saturday 28 July 2018

விடுதலைப் புலிகளுடன் இராமசாமிக்கு தொடர்பா? வீண் குற்றச்சாட்டுகள் வேண்டாம்- கணபதி ராவ்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தமிழர்களுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் குரல் கொடுக்கும் பேராசிரியர் பி.இராமசாமி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாய்க் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததற்காக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டுகின்றனர்.

ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்ட மனிதாபிமானமற்ற கொடூரங்களுக்கு எதிராக இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே போர் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றே பேராசிரியர் இராமசாமி குரல் கொடுத்து வருகிரார்.

ஈழ மக்கள் மட்டுமல்லாது பிலிப்பைன்ஸ், மோரோ கிளர்ச்சி படையினர், ஆச்சே விடுதலை போராட்டக் குழுவினர் போன்றவற்றுக்கும் பேராசிரியர் இராமசாமி குரல் கொடுத்துள்ளார்.

அப்போதெல்லாம் இராமசாமியை விமர்சிக்காதவர்கள் இன்று ஸாகிர் நாய்க்கிற்காக வீண் பழி சுமத்துகின்றனர்.

ஹிண்ட்ராஃப் காலகட்டத்தின் போது போராடிய தலைவர்களான எங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தோம்.

பேராசிரியர் இராமசாமி மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என குறிப்பிட்ட கணபதி ராவ், ஹிண்ட்ராஃப் போராளிகள் இவை அனைத்தையும்  வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment