Monday, 9 July 2018

நஜிப்புக்கு நிதி திரட்டிய பெக்கான் அம்னோ வங்கி கணக்கு முடக்கப்பட்டது


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டிய ஜாமீன் தொகைக்கு உதவும் வகையில் பெக்கான் அம்னோ தொகுதித் தலைவர் திறந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டது தொடர்பில் பெக்கான் வனிதா அம்னோ தலைவி ஸால்மா அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

இந்த வங்கி கணக்கு மட்டும் தான் முடக்கப்பட்டுள்ளது. மற்றவை பற்றி தெரியாது. இந்த வங்கி கணக்கு பெக்கான் அம்னோ தொகுதியால் திறக்கப்பட்டது ஆகும் என அவர் சொன்னார்.

ஆயினும் கூட்டரசுப் பிரதேச முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் ரஸ்லான் ரபி தொடங்கிய நன்கொடை திட்டம் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நன்கொடை நிதி திங்கட்கிழமை எண்ணப்படும் என ரஸ்லான் கூறினார்.

இந்த நன்கொடை வசூலிப்பில் நேற்று மாலை 5.00 மணிவரை 233,908 வெள்ளி திரட்டப்பட்டது.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப்பை ஜாமீனில் விடுவிப்பதற்கு விதிக்கப்பட்ட 10 லட்சம் வெள்ளியில் ஒரு பகுதியை இந்த நன்கொடை திரட்டப்படுகிறது.

No comments:

Post a Comment