கோலாலம்பூர்-
இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணை சபாநாயகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் முகமட் ரஷீட் ஹஸ்னான், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் ஆகியோர் துணை சபாநாயகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்விருவரின் பெயரையும் பிரதமர் துன் மகாதீர் முன்மொழிந்தார். இதில் ஙா கோர் மிங் 124 வாக்குகளையும் முகமட் ரஷீட் 121 வாக்குகளையும் பெற்றனர்.
தேசிய முன்னணி முன்மொழிந்த வேட்பாளரான பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனால்ட் கியாண்டி 93 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
முன்னாள் நீதிபது முகமட் அரிஃப் முகமட் யூசோஃப் இன்று நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதலாவது கூட்டத் தொடர் 20 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment