ரா.தங்கமணி
ஷா ஆலம்-
சுங்கை கண்டீஸ் சட்டமன்றத் தொகுதியில் சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் நலத் திட்டங்கள் குறித்து மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி விளக்கமளித்தார்.
இடைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள இத்தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு முனைப்பு காட்டுகிறது.
இங்குள்ள மக்களுக்காக சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு ஆக்ககரமான நலத் திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைகளாக சிலாங்கூர் மாநில ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் கூட்டணி அனைத்து மக்களுக்கும் பல்வேறான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment