Friday, 13 July 2018

கணபதி ராவை மரியாதை நிமித்தம் சந்தித்தார் வைகோ


ரா.தங்கமணி

ஷா ஆலம்- 
தமிழ்நாடு, மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று மரியாதை நிமித்தம் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவை சந்தித்தார்.

மலேசியாவுக்கு குறுகிய கால வருகை மேற்கொண்டுள்ள வைகோ, இன்று காலை சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தில் கணபதி ராவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்தியர்கள் சார்ந்த பல விவகாரங்கள் குறித்து இவ்விருவரும் விவாதித்தனர்

அதில் அண்மைய காலமாக சர்ச்சையாக எழுந்துகொண்டிருக்கும் இந்தியாவுக்கான விசா விவகாரம் குறித்து கணபதி ராவ் விவாதித்தார்.

இங்குள்ள மலேசிய இந்தியர்கள் தென்னிந்தியாவை நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். அவர்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டவர்கள்.

முதல் தலைமுறை இந்தியர்கள் தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இரண்டாம் தலைமுறையினர் இங்கு சேர்த்த சொத்துகளின் மூலம் ஆன்மிக வழிபாட்டுக்கு செலவிட்டனர்.

இப்போது மூன்றாம் தலைமுறையில் உள்ள எங்களுக்கு தென்னிந்தியாவுடன் நெருக்கமான உறவு உள்ளது ஆலயங்களினால் தான். அவ்வாறு ஆலயங்களை சுற்றி பார்க்க வரும் பயணிகளுக்கான விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும்.

இந்தியாவுக்கு வருகை புரியும் மலேசிய இந்தியர்களுக்கான விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து  மறுபரிசீலனை செய்ய வலியுறுத்த வேண்டும் என வைகோவிடம் கணபதி ராவ்  வேண்டுகோள் விடுத்தார்.


No comments:

Post a Comment