Friday, 13 July 2018
பெம்பான் நில குடியேற்றத் திட்டத்தில் கம்போங் செக்கடி மக்களுக்கே முன்னுரிமை - சிவசுப்பிரமணியம்
புனிதா சுகுமாறன்
ஈப்போ
பெம்பான் குடியிருப்பு நிலத் திட்டத்தில் கம்போங் செக்கடி பகுதியில் வாழ்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இக்குடியேற்றத் திட்டத்தில் கடந்த ஆட்சியின்போது 144 பேருக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அடையாளம் காணப்பட்டுள்ள 144 பேரில் 4,5 பேர் மட்டுமே கம்போங் செக்கடியில் வாழ்ந்த மக்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
வெளியாட்களுக்கு நிலம் வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதி முடியாது என குறிப்பிட்ட சிவசுப்பிரமணியம், வெளியாட்களின் பெயரை நீக்கி கம்போங் செக்கடி மக்களுக்கு அந்த நிலம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வேன்.
இங்குள்ள மக்களுக்கே நிலம் கிடைக்கப் பெறுவது தொடர்பில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் ஆகியோரிடமும் கலந்து பேசியுள்ளதாக இன்று நடைபெற்ற புந்தோங் சமூகநல இலாகா அலுவலகத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் அன்பளிப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் 71 பேருக்கு அன்பளிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment