Sunday, 15 July 2018

கணக்கில் காட்டப்படாத நகைகள் பறிமுதல் செய்யப்படும் - சுங்கத்துறை தலைமை இயக்குனர்


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு லெபனானிய நகைக்கடையிலிருந்து அனுப்பப்பட்ட நகைகள் குறித்து அறிவிக்காவில் அவை பறிமுதல் செய்யப்படும் என  சுங்கத்துறை தலைமை இயக்குனர் டத்தோ டி.சுப்பிரமணியம் கூறினார்.

சுங்கத்துறையில் அறிவிக்கப்படாத பொருள் பறிமுதலுக்குரியது என குறிப்பிட்ட அவர், போலீசார் கைப்பற்றிய  ரோஸ்மாவின் 44 நகைகள் குறித்து கேள்வி எழுப்புகையில் இவ்வாறு கூறினார், மேலும் இது தொடர்பில் போலீஸ் தமது தரப்பை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
ரோஸ்மாவின் நகைகள் குறித்து கேள்வி எழுப்பிய ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர், 'இந்த நகைகள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோது சுங்கத்துறையிடம் அறிவிக்கப்பட்டதா?, அந்த நகைகளுக்கு சுங்கவரி செலுத்தப்பட்டதா?, ரோஸ்மாவிடம் இந்த நகைகள் எவ்வாறு போய் சேர்ந்தன? போன்ற கேள்விகளை எழுப்பியதை அடுத்து சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment