Thursday, 19 July 2018

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நஜிப்பே தகுதியானவர்- அஸ்மின் அலி


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்று கூறி பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடியை சீண்டியுள்ளார்.

'எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பெக்கானே (டத்தோஶ்ரீ நஜிப்) தகுதி வாய்ந்தவர் என கருதுகிறேன்' என்று மக்களவையில் அஸ்மின் அலி கூறினார்.

மக்களவையில் கேள்விகளை எழுப்புவதற்கு டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி அனுமதி வழங்கியதை அடுத்து அஸ்மின் அலி இவ்வாறு கூறினார்.

இதற்கு முன்னதாக மக்களைவில் எதிர்க்கட்சித் தலைவராக டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:

Post a Comment