Thursday, 19 July 2018

வாகனமோட்டிகளுக்கு ஆபத்தாக அமையும் சாலை குழிகள்; சம்பந்தப்பட்ட இலாகா நடவடிக்கை எடுக்குமா?


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்- 
இங்கு முஹிபா தொழிற்பேட்டை பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதை பொணிப்பணி துறை இலாகா, கோலாகங்சார் மாநகர் மன்றம் ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டும் என சமூகச் சேவையாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

அதிகமான வாகனங்களும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பயன்படுத்தும் இச்சாலை பல மாதங்களாகவே சீரமைக்கப்படாமல் உள்ளது, 2 அடி ஆழத்திற்கும் இச்சாலை குழியாக உள்ளதால் இது வாகனங்கள் சேதமடைவதற்கு வழி வகுக்கிறது.

சில நேரங்களில் சாலை குழிகளில் வாகனங்கள் இறங்குவதை தவிர்க்க முற்படும்போது அது மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் இதர வாகனமோட்டிகளுக்கும் ஆபத்தாக உள்ளது.

இந்த சாலையை முழுவதும் சீரமைக்க பொதுப்பணி இலாகா, கோலகங்சார் மாநகர் மன்றம் ஆகியவை ஆக்ககரமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

அலட்சியம் காட்டப்படுவதனால் பிறரது உயிருக்கு அது ஆபத்தாக முடியலாம் என்பதை சம்பந்தப்பட்ட இலாகாக்கள் உணர வேண்டும் என மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment