Tuesday, 31 July 2018

'மலாய்க்காரர்கள் வந்தேறிகள்'? மன்னிப்பு கேட்டார் குலசேகரன்


கோலாலம்பூர்-
இந்நாட்டிலுள்ள மலாய்க்காரர்களை வந்தேறிகள் என தாம் கூறியதாக வெளிவந்த தகவலுக்கு மன்னிப்பு கோரினார் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்.

தான் வெளியிட்ட கருத்து தவறாக சித்திரிக்கப்பட்டதை அடுத்து அது பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அந்த கருத்து மலாய்க்காரர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் நீலாயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் மலாயாவில் கால்பதித்துள்ளனர். அதற்கு உதாரணம் லெம்பா பூஜாங் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு இந்தியர்கள் வந்தேறிகள் என சொல்லப்படுவதில் துளியும் அடிப்படையற்றது என  தான் கூறிய செய்தி தவறான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட குளறுபடிக்கு மலாய்க்காரர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குலசேகரன் தமதறிக்கையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment