Thursday, 26 July 2018

சேவை அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்- தினகரன்


ரா.தங்கமணி

ஈப்போ-
கட்சியில் நீண்ட காலம் சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால் இன அடிப்படையிலான நியமனம் குறித்து கேள்வி எழுப்புவது நியாயமற்றது என பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாமின் இந்திய விவகார சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி குறிப்பிட்டார்.

மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றன.

மலேசியர் எனும் அடிப்படையிலேயே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைக்கப்பட்டது.

புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மலேசியராய் அனைவரும் வெற்றி கண்டோமே தவிர இன ரீதியில் பிரிந்து மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

மேலும், பல இன மக்களை கொண்ட கட்சிகள்  நீண்ட காலமாக சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர் என தினகரன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment